NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெகுவாக குறைந்துள்ள கோழி இறைச்சி தேவை!

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபா தொடக்கம் 150 ரூபா வரை குறையலாம் எனவும் அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

அடுத்த 15நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முட்டையின் விலையும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் 20 ரூபா வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles