NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெடுக்குநாறிமலையின் பிரதம பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதம பூசகரான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சிவராத்திரியன்று கைது செய்யப்பட்ட 8 பேர் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5 நாட்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles