NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெப்பமான காலநிலை காரணமாக மனநோய்கள் அதிகரிக்க அதிக வாய்ப்பு!

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, மன உளைச்சல் உள்ளிட்ட மனநோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையை அடிப்படையாக வைத்து மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடலாம் எனக் கூறப்படுகிறது.

மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் நீரிழப்பு நோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்த அவர், அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறையக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலை மே இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாகவும் மனநல மருத்துவர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles