NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெயில் அடித்தாலும் பரவாயில்லை : ஜப்பான் மக்களின் புதிய கண்டுபிடிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைக்காலம் மோசமான வெப்பநிலையை கொண்டிருப்பதோடு 35 பாகை செல்சியஸ்க்கு மேல் வெயில் பதிவாகி வரும் நிலையில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை அந்நாட்டு மக்கள் தேடி திரிகிறார்கள்.

அப்படி வாடி வதங்குபவர்களுக்கு வரபிரசாதமாக மினி ஃபேன் எனும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் விளையாடும் கிலுகிலுப்பை போல் காட்சியளிக்கும் மினி பேனை வைத்துக் கொண்டே மக்கள் சாலையில் நடக்கிறார்கள்.

வெயில் தாங்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் டோக்கியோ வாசிகள் இப்போது எல்லாம் மினி பேனும், தண்ணீர் பாட்டீல் கையுமாகதான் திரிகிறோம் என்கிறார்கள்.

வெயிலுக்கு அஞ்சும் மக்கள் ஐஸ்கிரீம் கடைகளை நோக்கி படையெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெயில் அடித்தாலும் பரவாயில்லை என அந்நாட்டு மக்கள் செயற்பட்டாலும் எப்படியாவது பருவ நிலை மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles