டுபாய், கட்டார் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (02) தெமட்டகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடவைச் சேர்ந்த ஷிப்னா என்ற பெண், தமக்கு டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்து, தெமட்டகொடையில் வசிக்கும் மூவரிடம் தலா 4 இலட்சம், 2.5 இலட்சம் மற்றும் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு 3 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்த பெண் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (02) இரவு தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார்.