NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடிவு..!


ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.


அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவென மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்தார்.


மேலும், மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


காலம் நிர்ணயிக்கப்பட்ட திரவ பால் பக்கெட் 450 மில்லி லீட்டர் காலம் முந்தைய விலை 225 ரூபா புதிய விலை 200 ரூபா


திரவ பால் 450 மில்லி லீட்டர் முந்தைய விலை 200 ரூபா புதிய விலை 170 ரூபா


திரவ பால் 900 மில்லி லீட்டர் முந்தைய விலை 440 ரூபா புதிய விலை 380 ரூபா





Share:

Related Articles