(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
முதலீட்டுச் சபையின் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்தை ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மட்டும் 5 பில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்த அவர், இந்த அனைத்து முன்னோடி திட்டங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.