NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அநுர என்ற திசைகாட்டி சூறாவளியால் அரசியலில் பயன்படுத்தப்பட்ட மாபெரும் மரங்களும் மலைகளும் சரிந்து விழுந்தன – கலாநிதி சமன் வன்னியாரச்சிகே

அநுர என்ற திசைகாட்டி சூறாவளியால் அரசியலில் பயன்படுத்தப்பட்ட மாபெரும் மரங்களும் மலைகளும் சரிந்து விழுந்தன.

நாட்டில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது… நாட்டை அழித்த ஊழல் அரசியல்வாதிகள் ஓய்வு பெற்றனர்.

வரலாற்று மாற்றத்தின் முதல் ஒளியை ரஞ்சன் ராமநாயக்க ஏற்றி வைத்தார்.

ரஞ்சனின் துணிச்சலான குரல் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.
…………………………………….
இளம் வாக்காளர்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே மேலும் கருத்து தெரிவிக்கையில்.
…………………………………………
வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் நவம்பர் 14 ஆகும்.

மக்களின் எதிர்காலம் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இதுவொரு அரசியலமைப்பு அதிகாரம் பெறும் தேர்தல் ஆகும்.

ஜனநாயக நாட்டில் ஒரு ஜனாதிபதி‌ புதுப்பிறப் பெடுத்துள்ளார் ..

அநுர என்ற சூறாவளியால், பொதுப்பணத்தை அனுபவித்துக்கொண்டிருந்த அமைச்சர்களுக்கு இன்று அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. மக்கள் அவர்களை ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளியுள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்கள் என பலரும் ஓய்வு நிலைக்கு வந்துள்ளனர்.

கடவுள் மிதிக்காத தரையில் பிசாசு நடனமாடுமாம் அது போல் ஒரு நரக அரசியலே இலங்கையில் காணப்பட்டது…

இப்போது ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அந்த உருவாக்கமானது முன்னாள் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஊடகங்களில் தமது சந்தித்து ஓய்வை அறிவிக்க வைத்துள்ளது.

இராஜதந்திரிகள் பலர் இப்போது இந்த நாட்டிற்கு வருகிறார்கள்..

நாமலுக்கு இப்போது மக்கள் துணை இல்லை, அதனால்தான் தேசியப்பட்டியலில் இருந்து வர முயற்சிக்கின்றார்.

வலுவான ஒரு எதிர்க்கட்சி அமைக்க வேண்டும். சஜித்தின் சமூக சேவை ஒரு பொய்யான சேவை, அவர் பொய்களுக்கும் பேராசைக்குமே சேவை செய்கிறார்.. மக்கள் சஜித்திற்கு ஒரு நல்ல முடிவை கொடுத்துள்ளார்கள்.

ஒரு புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.. அனுரவை தேர்தலில் ஜனாதிபதியாக்கும் முயற்சிக்கு ஆரம்ப வித்திட்டவர் ரஞ்சன் ராமநாயக்கவே ஆவார்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரஞ்சன் ராமநாயக்க.

ரஞ்சன் ராமநாயக்க எமது நாட்டு அரசியலின் உண்மையை வெளிப்படுத்தினார்…
அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது உண்மையை வெளிப்படுத்திய ஒரு தலைவர் ரஞ்சன் ராமநாயக்க.

ரஞ்சன் ராமநாயக்க தேசிய பணியை சிறப்பாக செய்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவே மாற்றத்திற்கான முதலாவது மணியை அடித்தவர்.. ரஞ்சன் ராமநாயக்க சோசலிச மாற்றத்தின் துணிச்சலான குரல்.ஆகவே ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு நபர்.

இந்த நாட்டை நாசம் செய்பவர்களுக்கு ரஞ்சன் ஒரு பைத்தியக்காரனாகத் தான் தெரிகிறார்.
ஆகவே தான் நான் கூறுகிறேன், நாடாளுமன்றத்தில் ரஞ்சனை நாங்கள் கட்டாயம் அமர வைக்க வேண்டும்.

அரசியல் மாற்றத்திற்கான முதல் தீபத்தை ஏற்றியவர் ரஞ்சன்..இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றிய தலைவர். ஆகவே மக்கள் அவரை தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Share:

Related Articles