NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ள இந்திய பிரதமர் மோடி!

அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து டுபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி டுபாயில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் நாளை மறுதினம் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. அபுதாபி இந்து கோவிலை பிரதமர் மோடி நாளை மறுநாள் மாலை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

Share:

Related Articles