NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் நிறைமாதக் கர்ப்பிணி படுகாயம் !

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நிறைமாத கர்ப்பிணி படுகாயம் அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் ஹோலியோக் நகரில் உள்ள சாலையோரம் நின்று நண்பர்கள் சிலர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோவமடைந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் அந்த வழியாக பஸ்சில் சென்ற ஒரு நிறைமாத கர்ப்பிணி படுகாயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles