NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – குடும்பஸ்தர் பலி

அம்பலாங்கொடை பகுதியில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலபிட்டிய ரன்தொம்பை பகுதியைச் சேர்ந்த உஜித்சிறி டி சொய்சா என்ற 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பஸ் நிலையம் முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தில் வாடகை வண்டி சாரதியாக கடமையாற்றியவர் எனவும், அம்பலாங்கொடையில் இருந்து தனது வீட்டிற்கு ரண்தொம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

9MM துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதாகவும், அவரது உடலில் நான்கு காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles