NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அயர்லாந்து அணித் தலைமையில் மாற்றம் !

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட அன்ட்ரூ பல்பைனி அப்பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் சபை இந்த விடயத்தினை உத்தியோகபூர்வமாக உறுதி செய்திருப்பதோடு அயர்லாந்து அணியின் தற்காலிக தலைவராக போல் ஸ்டெர்லிங் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற பல்பைனி மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அயர்லாந்தை 89 தடவைகள் வழிநடாத்தி இருக்கின்றார்.

எனினும் இம்முறை உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அன்ட்ரூ பல்பைனி மூலம் வழிநடாத்தப்பட்ட அயர்லாந்து கிரிக்கெட் அணி சுபர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை இழந்ததோடு, தொடரின் குழுநிலைப் போட்டிகளிலும் ஒரேயொரு வெற்றியினை மாத்திரமே பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் நேபாளத்தினை வீழ்த்தி 7ஆம் இடத்தினை அயர்லாந்து பெற்றதன் பின்னர், தனது தலைவர் பொறுப்பில் இருந்து அன்ட்ரூ பல்பைனி இராஜினமா செய்வதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

Share:

Related Articles