NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு..!

அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்திற்கு இணங்க மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத் துறையில் வைத்தியர்கள் முதல் சுகாதார உதவியாளர்கள் வரை அவர்களின் சேவை பாராட்டப்பட்டு மதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு மேலதிக நேரமாக 120 மணித்தியாலங்களுக்கு மேல் பணி புரிய நேர்வதாகவும், அதனை கருத்திற் கொண்டே வைத்தியர்கள் முதல் அரசாங்க ஊழியர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்திற்கு இணங்க மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, அரசாங்க ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்தை விட ஏப்ரல் மாதம் அதிகரித்த சம்பளத்தை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles