நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.மேலும், நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.மேலும், சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.