அரச வைத்தியசாலைகளில் மதிய உணவு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் சில வைத்தியசாலைகளின் சமையல் பணியாளர்கள் இணைந்து கொண்டுள்ளமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் எனவும் சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே, குழந்தைகள், புற்றுநோய், மகப்பேறு மற்றும் சிறுநீரக மருத்துவமனைகள், இரத்த வங்கிகள் மற்றும் மனநல பிரிவுகளில் தன்னார்வ அடிப்படையில் சேவைகள் வழங்கப்படுகிறது.