NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது..!

மாரவில பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது மிகவும் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சுற்றிவளைப்பு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இந்த வலம்புரி சங்கு, 01 கிலோ 105 கிராம் எடையுடையது என்பதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles