வெசாக் பண்டிகையுடன் இணைந்து மாணவர்களுக்கு
அறநெறி (தம்ம) பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் பிரகாரம், அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு, அவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு வழிநடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.