NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த கார் விபத்துக்குள்ளானது!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் சாலியவெவ 15 ஆம் மைல் போஸ்ட் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது சாரதியுடன் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி ஜீப்பில் பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப், அவருக்கு முன்னால் பயணித்த  உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் எம்.பி காயங்களின்றி தப்பினார். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share:

Related Articles