NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அலையில் சிக்கிய 06 பேர் மீட்பு..!

நிலாவெளி கடலில் நீராடச் சென்று அலையில் சிக்கிய 6 பேரை திருகோணமலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து குறித்த குழுவினரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட மூவரே அலையில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) பிற்பகல் குறித்த குழுவினர் கடலில் நீராடச் சென்ற போதே அலையில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:

Related Articles