வலைபயிற்சியின் போது அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவரான சமீர் கானின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டினார்கள்.
பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா பகுதியைச் சேர்ந்த போர்வை விற்பனை செய்பவரின் மகனான 11ஆம் வகுப்பு படிக்கும் சமீர் கான், அண்மையில் பஞ்சாப் மாநில அணியின் U19 உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 16 வயதிலேயே U19 கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சமீரின் புகழ் அம்மாநிலம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது.
ஜடேஜாவை போல் இடதுகை ஸ்பின்னரான சமீர், அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளராக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீசிய பந்துகளில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.