NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஸ்வெசும’ சமூக நலத்திட்டம் தொடர்பில் ஆராய விசேட குழு..!

அஸ்வெசும நலன்புரித்திட்ட உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் நலன்களை வழங்குவதில் காணப்படும் அசௌகரியங்கள், நியாயமற்ற செயல்முறை மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles