NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று போட்டிகளை நடத்துவதில் சிக்கல்!

கொழும்பில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளை இடமாற்றுவது தொடர்பில் ஆசிய கிரிக்கட் பேரவை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் 4 சுற்றின் 5 போட்டிகளையும் இறுதி போட்டியையும் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக போட்டியை இடமாற்றுவது தொடர்பில் ஆசிய கிரிக்கட் பேரவை, ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை என்பவற்றுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பல்லேகல, தம்புளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளுக்கும் இடமாற்றம் குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles