(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இங்கிலாந்துக்கும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று (16) ஆரம்பமாகவுள்ளது.
பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பர்மிங்காமில் தொடங்குகிறது.
ஐசிசி உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.
2021 முதல் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி 4இல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.