NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து அணிக்கு புதிய தலைவர் ?

இந்த உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் ஜாஸ் பட்லர் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‍

ஆனால் அதன் பிறகு நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்கு புதிய தலைவராக ஜேக் கிராவ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் வகையில் முதன்மை அணியின் வீரர்களுக்கு அந்த அயர்லாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட இருக்கும் வேளையில் இந்த தொடரில் இரண்டாம் தர இங்கிலாந்து அணி ஜேக் கிராவுலி தலைமையில் களமிறங்க உள்ளது.

பென் டக்கெட் துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வரும் வேளையில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு தலைவர் மற்றும் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles