NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து கவுண்டி தொடரில் சாய் சுதர்சன் !

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாடும் ஷாம் கரண் போன்ற சில நட்சத்திர வீரர்கள் நியூழிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளனர். அதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய மூன்றுபோட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். அந்த நிலைமையில் உள்ளூர் அளவில் வெறும் 8 தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தும் நல்ல ஃபார்மில் இருப்பதன் காரணமாக சாய் சுதர்சனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Share:

Related Articles