நாட்டின் சில இடங்களில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்ட நிலை காணப்படும்.
மேலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.