NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியாவில் இன்று பல மாநிலங்களிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றான சவுகார்பேட்டை பகுதியில் காலை முதலே வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.

பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 

இதேபோல் வடமாநிலத்தவர் அதிகம் உள்ள புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 

Share:

Related Articles