இந்தியாவின் கரையோரப் பகுதிகள் மற்றும் தெற்கு பங்களாதேஷில் சூறாவளி காரணமாக சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பகுதிகளில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசியயுள்ளதுடன் பலத்த காற்று காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட ரெமல் புயல் காரணமாக சுமார் ஒரு மில்லியன் மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சூறாவளி காரணமாக 3.75 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 35,483 வீடுகள் முற்றாகவும் 115,992 வீடுகள் பகுதிளவிலும் சேதமடைந்துள்ளன.
சூறாவளி காரணமாக சுமார் 1200 மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.