NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு விஜயம்!

இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (01) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சில இடங்களை பார்வையிடவுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) இந்திய நிதி அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles