NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேசிய எரிமலை வெடிப்பில் 11 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் மாயமாகியுள்ளனர்.

மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் நேற்று (03) எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. 

படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், “26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்தவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளோம். அதில் 3 பேர் மட்டுமே உயிருடனுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளன. சாலை மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles