எல்பிட்டிய – அம்பலாங்கொட, பகுதியில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்று வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் குருந்துவத்த – பிடிகல பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.