NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் நடைமுறைக்கு வரும் மருந்துகளின் விலை குறைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் பலவகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ள நிலையில், இந்த விலை குறைப்பானது இன்று (26) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்தின்படி, 60 வகையான மருந்துகளுக்கு 16 சதவீதம் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2,270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles