NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரு பிள்ளைகளின் தாய் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை!

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (20) கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கரையோரப் ரயிலில் ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாதோட்டை – புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் காலி கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles