(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியன இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இன்று (14) கையெழுத்திட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தத்தில், சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்த முயற்சியில் தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை அமைப்பது உள்ளடங்கும் என்று இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.