இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெற்றதையடுத்து, இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அரச வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அனுபவமிக்க இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றினார்.
அதுமட்டுமன்றி, முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.
தற்போதைய இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தற்போது இராணுவத் தளபதியாக தனது 2ஆவது சேவை நீடிப்புடன் சேவையை மேற்கொண்டு வருகின்ற நிலையில், குறித்த மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் பதவி விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.