NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு !

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு ஷரத்துகளை மீறியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 08 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக்கின் போது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இலங்கை வீரரான சாலிய சமன், 37 வயதான சகலதுறை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles