இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
தாக்குதல் சம்பவத்தை முன்னிறுத்தியே இவ் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரவ்பொதான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திடீர் வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கவிருந்த பயணிகள் பலர் தற்போது பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.