NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு..!

இலங்கை மத்திய வங்கி 1,10,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Share:

Related Articles