NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் – 4ஆம் நாள் ஆட்டம் இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 199  ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Ibrahim Zadran ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், Rahmat Shah ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் Noor Ali Zadran 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 439 ஓட்டங்களை பெற்றது.

அதேநேரம் முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

இதன்படி ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை விட 42 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியுள்ளது. இந்நிலையில் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles