இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22 லட்சம் இந்திய ரூபாய் பெறுமதியிலான தங்கம், இந்தியாவின் பாம்பன் பாலத்தின் அருகே மீட்கப்பட்டுள்ளது.
மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 3.5 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.