NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளையோர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது !

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான இளையோர் லீக் தொடர் இம்மாதம் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடரில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கண்டி, காலி மற்றும் தம்புள்ள என ஐந்து அணிகள் மோதவுள்ளதுடன், தொடர் இம்மாதம் 28ம் திகதி முதல் எதிர்வரும் 5ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக தொடரில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் கண்டி – பல்லேகலை மற்றும் கண்டி – அஸ்கிரிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளுடன் தலா ஒவ்வொருமுறை மோதவுள்ளதுடன் அணிக்கு தலா 4 போட்டிகள் முதல் சுற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி ஜூலை 5ம் திகதி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles