தற்போதைய நெருக்கடி நிலையில் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வேண்டிய அவசியமில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் போர் தீவிரம் அடைந்துள்ள போதும், தம்மை மீட்குமாறு எந்தவொரு இலங்கையரும் கோரிக்கை விடுக்கவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.
யாராவது இஸ்ரேலில் இருந்து நாட்டு திரும்ப விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தூதரகத்துடன், தகவல் பரிமாறப்பட்டு வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.