(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் நடத்தும் கடுமையான தாக்குதல்களால், உலக மசகு எண்ணெய் விலை பாதிக்கப்படலாம் என சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டாலும், ஆசிய சந்தைக்கு ஈரானின் மசகு எண்ணெய் விநியோகம் தொடர்கிறது.
ஆனால், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்தால் ஈரானின் மசகு எண்ணெய் விநியோகம் தடைபடுவதை தவிர்க்க முடியாது.
இந்நிலையில் இன்று (09) பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4 டொலர்களால் அதிகரித்துள்ளது.