NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக டேனியல் நோபோவா தெரிவு!

ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக டேனியல் நோபோவா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 35 வயதான டேனியல் நோபோவா ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில், ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதி டேனியல் நோபோவா, எதிர்வரும் 26ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலவீனமான பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுடன் போராடி வரும் ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குவோம், நாளை முதல் உங்கள் புதிய அதிபராக டேனியல் நோபோவா செயல்படத் தொடங்குகிறார் ” என்று நோபோவா கடற்கரை நகரமான ஓலோனில் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

நோபோவா 52% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், அவரை எதிரித்து போட்டியிட்ட லூயிசா கோன்சலஸ் சுமார் 48% வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles