NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈரான் அரசாங்கத்தின் கடுமையான உத்தரவு !

ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டமூலத்தின் விதிகளின் படி, பொது இடங்களில் ‘தகாத முறையில்’ உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஈரானின் தண்டனை சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டமூலம் சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் சபையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த சட்டமூல அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என்று கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.

இந்த ஹிஜாப் சட்டமூலம் 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பெண் சாரதி அல்லது பெண் பயணிகள் ஆடைக்கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும். அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles