NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈரான் சுரங்கப்பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

ஈரானில் டாம்கான் நகரில் உள்ள சுரங்கமொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 400 மீற்றர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் அங்கேயே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை குறித்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்துக் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles