NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாமல் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் முறையான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போதும் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்கான பதிவு கூட உள்ளது. சரத் பொன்சேகா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் உள்ளன.

இந்த அறிக்கைகளில் யாராவது திருப்தி அடையவில்லை என்றால், அடுத்த கட்டமாக, தொலைக்காட்சி, வானொலி சேனல்களில் அரச சாரா நிறுவனங்களைக் கொண்டு விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, உலகில் உள்ள பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் குறித்து விசாரணை நடத்தும் அரச நிறுவனங்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.

குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்களை அழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles