NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் !

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி அமெரிக்கா விஜயமாகியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, அவர் நியூயோர்க் சென்றடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் இன்று உரையாற்றவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஸ்லென்ஸ்கா ஆகியோர் அமெரிக்கா வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்துடன் உக்ரைன் ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து கலந்துரையாட உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles