(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் விஷேட தூதுவராக பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி இந்தியாவில் நடை பெறவுள்ளது. இதனைஇ ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 20 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1987 போட்டிக்குப் பிறகுஇ உலககிண்ணப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இது நான்காவது தடவையாகும்.
இந்தியா முழுவதும் 10 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
இந்தியாஇ ஆப்கானிஸ்தான்இ அவுஸ்திரேலியாஇ பங்களாதேஷ்இ இங்கிலாந்துஇ நியூசிலாந்துஇ பாகிஸ்தான்இ தென்னாபிரிக்கஇ இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில்இ 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் விஷேட தூதுவராக பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷாருக்கான் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.