NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ண தகுதிகான் சுற்றில் இலங்கை அணி வெற்றி!

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகான் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிக்காக 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த சமரி அத்தபத்து இந்தப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் விளைவாக, அவுஸ்திரேலியா, இந்தியா, நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கை A குழுவில் இடம்பிடித்துள்ளது.

Share:

Related Articles